திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் கோவில்களில் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை என்றும், திருநீறு, குங்குமம் தட்டில் வைத்து வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திங்கள் முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா சோதனையை அமைச்சர் சேகர்பாபு சென்னை புரசைவாக்கத்தில் தொடக்கி வைத்தார்.
தமிழகக் கோவில்களில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்பது தொடர்பாகச் சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசித்து வருவதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.