மத்திய அரசின் சீர்மிகு நகரங்களுக்கான விருதுகள் பட்டியலில் சென்னை மற்றும் ஈரோடு மாவட்டம் இடம் பெற்றுள்ளன.
மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் சீர்மிகு நகரம் திட்டம் தொடங்கப்பட்டு 10 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பேரிடர் தடுப்பு பணி தொடர்பாக கூடுதலாக 2 பிரிவுகள் சேர்க்கப்பட்டு 2 ஆயிரத்து 20 ஆண்டிற்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் காற்று மாசு ஏற்படுவதை குறைதல், புதைவட கம்பித்தடம் மூலம் மின் விநியோகம் வழங்கியது மற்றும் கொரோனா தடுப்பு பணியில் புதிய முயற்சிகளை செயல்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் சென்னை மாநகராட்சிக்கு முதலிடம் கிடைத்து உள்ளது.
மேலும் ஈரோடு மாவட்டம் சுற்றுச்சூழல் கட்டமைத்தல் பிரிவில் மூன்றாவது இடமும், சிறந்த நகரம் பிரிவின் 4-வது சுற்றில் முதல் இடமும் பிடித்துள்ளது. அதேபோல் சீர்மிகு நகரம் திட்ட செயல்படுத்துதலில் தமிழ்நாட்டிற்கு மூன்றாவது இடம் கிடைத்து உள்ளது.