கோவில்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை என்பதால் தான் இன்னும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு தனியாக குறை கேட்பு மையத்தை துவக்கி வைத்த அவர், கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த பிறகு கோவில்கள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றார்.
கோவிலில் நகை, சிலை திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்ற அவர், அதுதொடர்பான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனக் கூறினார்.