கொரோனா கட்டுப்பாடுகளுடன் வரும் ஒன்றாம் தேதி முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு மீண்டும் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரம் மாதம் 24 ஆம் தேதி முதல் உள்நாட்டு சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து மீண்டும் துபாய்க்கு விமான சேவை தொடங்கவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணிகளிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் உள்ளிட்டவை கட்டாயம் இருக்க வேண்டுமென ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.