12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்வது தொடர்பாக ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 10, 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களுடன் 12-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே,மாணவர்களின் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை வழங்குமாறு தேர்வுத்துறை கோரியிருந்த நிலையில், அவற்றில் இருந்து அதிகளவில் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.