நாமக்கல் மாவட்டம் காட்டனாச்சம்பட்டியில் டேபிள் ஃபேன் கீழே விழுந்து மின்சாரம் தாக்கியதில் தாயும், ஒன்றரை வயது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜா என்பவரின் மனைவி பிரியா, வீட்டை துடைத்துக்கொண்டிருக்கும்போது இயங்கி கொண்டிருந்த டேபிள் ஃபேன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் பிரியா மற்றும் அவரது ஒன்றரை வயது மகன் முகுந்தன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் முகுந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் உயிரிழந்தார்.
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.