அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்துக்கு 424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வுத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் ஜி.எம்.ஆர் நிறுவனத்திடம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் 73 கோடியே 74 லட்சம் யூனிட் மின்சாரத்தை 824 கோடியே 77 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சராசரியாக ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய் 77 காசுகளுக்கு வாங்கப்பட்டுள்ளது.
ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய் 39 காசுகள், 5 ரூபாய் 42 காசுகள் எனச் சந்தை விலை இருந்தபோது அதிக விலைக்கு வாங்கியதால் மின் பகிர்மானக் கழகத்துக்கு 424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.