உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதாக்கள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இறுதியாக, தனி அலுவலர்களின் பதவிக்காலம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பேரவையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன் ஆகியோர் தாக்கல் செய்த சட்ட மசோதாவில், புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் பதவி காலம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்வதற்கு திருத்தம் கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான தனி அலுவலர்களின் பதவிகாலத்தையும் 6 மாதம் நீட்டிப்பு செய்ய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.