வழக்கமான கதாநாயக புன்சிரிப்பு ஏன் இல்லை என்பதற்கு, தான் ஏற்றிருப்பது மலர் கிரீடம் இல்லை, முள் கிரீடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிப்பதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், முதலமைச்சரை சந்திக்க வருபவர்கள் அவரிடம் எப்போதும் இருந்த கதாநாயக புன்சிரிப்பு, பொறுப்பேற்ற பிறகு ஏன் இல்லை? என கேட்பதாக குறிப்பிட்டார்.
அவர்களுக்கு பதிலளிக்கும் முதலமைச்சர், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும்போது பொறுப்பேற்றிருக்கும்போது எப்படி சந்தோசமாக இருக்க முடியும் எனவும், தான் ஏற்றிருப்பது மலர் கிரீடம் இல்லை, முள் கிரீடம் என கூறுவதாகவும் தெரிவித்தார்.