சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கி உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஜெயராஜ், பென்னிக்ஸின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பஜார் பகுதியில் அவர்களது கடை முன் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு கனிமொழி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பென்னிக்ஸின் வீட்டிற்கு சென்ற கனிமொழி, தாயார் ஜெயராணி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.