தமிழ்நாட்டில் இறங்குமுகமாக அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் உள்பட 12 மாவட்டங்களில் இரட்டை இலக்கத்திற்கு தினசரி கொரோனா பாதிப்பு சரிந்துள்ளது,
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேலும் 7 ஆயிரத்து 427 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 891 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஈரோட்டில் மேலும் 795 பேரும்,திருப்பூரில் புதிதாக 458 பேரும் சென்னையில் மேலும் 439 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வுக்கு சிகிச்சை பலனளிக்காமல் 90 வயது கோவை மூதாட்டி , 94 வயது மதுரை மூதாட்டி உள்பட ஒரேநாளில் 189 பேர் உயிரிழந்தனர்.கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 281 பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
--