தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு, டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டாகத் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,159 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் 554 மாதிரிகளின் முடிவுகள் வெளியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் டெல்டா வகை வைரஸால் தாக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அதிலும் குறிப்பாக, 12 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலரும் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா வகை வைரஸ் அதிக வீரியத்துடன் பரவும் என்பதால் பலர் கொத்து கொத்தாக பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.