தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் திடீரென சந்தித்துப் பேசினார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலினுக்கு நேரில் தமது வாழ்த்துகளை தெரிவித்ததாக கூறினார்.
மரியாதனை நிமித்தமான சந்திப்பில், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், கோதாவரி திட்டம் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விவாதித்ததாகவும் தமிழிசை தெரிவித்தார்.