அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்குவதையும், கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்குவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இந்தக் கல்வியாண்டுக்கான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் அடங்கிய வீடியோக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பாடங்களைக் கல்வித் தொலைக்காட்சியிலும், 10 தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பி மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளது. இந்த வீடியோக்களை மொத்தமாக வழங்கி மடிக்கணினியில் மாணவர்கள் படித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.