கொரோனா களத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க சுமார் 59 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் கொரோனா கால ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதனை செயல்படுத்துவதற்காக 58 கோடியே 59 லட்ச ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.