செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மருத்துவச் செலவு ரூ. 22 கோடி..! மகளைக் காப்பாற்ற மன்றாடும் தந்தை...

Jun 18, 2021 04:13:15 PM

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், எஸ்.எம்.ஏ எனப்படும் ஸ்பைனல் மஸ்குலர் அட்ரொபி நோயால் பாதிக்கப்பட்டுள்ள 2 வயது மகளைக் காப்பாற்ற 22 கோடி ரூபாய் தேவை என்ற நிலையில், அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் குழந்தையின் தந்தை...

துறுதுறு பார்வை, கள்ளம் கபடமற்ற புன்னகை என வளையவரும் மித்ரா என்ற இந்த 2 வயது குழந்தை ஸ்பைனல் மஸ்குலர் அட்ரொபி எனப்படும் முதுகெலும்பு தசை குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தசைகளை பலவீனப்படுத்தி, அவற்றின் இயக்கத்தை கடினமாக்கும் இந்த நோயால், குழந்தைகளின் மூளையில் உள்ள செல்கள் மற்றும் அவர்களின் முதுகெலும்பில் உள்ள நரம்புகள் சிதைவடைகின்றன.

இதனால் ஒரு கட்டத்தில் தசைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் சிக்கனல்களை அனுப்புவதை குழந்தைகளின் மூளை நிறுத்திவிடுகிறது.

இதன் காரணமாக காலப்போக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதுகெலும்பு தசைக் குறைபாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மற்ற நோய்களைப் போல் இந்த நோய்க்கான மருந்து அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. அத்தனை குறைவான விலையும் இல்லை.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஸ்.எம்.ஏ நோய்க்கான மருந்தின் விலை 16 கோடி ரூபாயாகவும் அதனை இறக்குமதி செய்வதற்கான இதர செலவுகளாக 6 கோடி ரூபாயும் என 22 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

அண்மையில் மும்பையைச் சேர்ந்த 5 மாத குழந்தையான டீராவிற்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது.

ஆனால் சிறிய அளவில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் தன்னால் 22 கோடி ரூபாயை ஒற்றை ஆளாகப் திரட்ட முடியாது என்று கூறும் சதீஷ்குமார், அதற்காக சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

இதுவரை ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது என்று கூறும் அவர், மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் தன்னுடைய மகளைக் காப்பாற்ற முடியும் என்கிறார். 

மகப்பேறு காலத்திலேயே குறிப்பிட்ட பரிசோதனைகள் மூலம் இந்த நோயைக் கண்டறியலாம் என்று மருத்துவர்கள் கூறியதாகக் கூறும் சதீஷ்குமார், குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இருப்பவர்கள் தங்களுடைய உறவு வட்டத்தில் யாருக்கேனும் இவ்வகை நோய் இருந்திருப்பது தெரிந்தால், மருத்துவர்களிடம் தெரிவித்து, உரிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்.


Advertisement
முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதியது...3 பேர் படுகாயம்
குக்கிராமங்கள் வரை போதையால் பாதிப்பு... டாஸ்மாக் மது விற்பனையை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் திருமாவளவன் வலியுறித்தல்
நெல்லையிலிருந்து குமரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி... மார்த்தாண்டம் வரையில் மட்டுமே லாரியின் சி.சி.டி.வி பதிவு
சென்னை சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கும் போது போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்பு அமைக்க திட்டம்
டிச.27 முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 48 ஆவது புத்தகக் கண்காட்சி
திட்டங்கள் விரைவாக நடக்க காரணமாக இருக்கும் ”அப்பாவுக்கு ஜே” நகைச்சுவை பேசிய அமைச்சர் கே.என்.நேரு
புல்லட் யானையின் இருப்பிடத்தை கண்டறிந்த வனத்துறை... தனியாக சுற்றிய யானை கூட்டத்தோடு சேர்ந்துள்ளது
தண்ணீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்கும் என்பதால் திருவாரூர் நகராட்சியுடன இளவங்கார்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
மத்திய கைலாஷ் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக U -போக்குவரத்து தற்காலிக மாற்றம்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement