திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
தேர்வாய் சிப்காட் தொழிற்பேட்டையில் எஸ்த்தல் எனப்படும் தனியார் ரப்பர் தூள் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. பழைய ரப்பர் டயர்களை வாங்கி அவற்றை பொடியாக்கி மீண்டும் புதிய டயர்கள் வடிவமைக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு அதிகாலை ஏற்பட்ட தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது.
இந்த தொழிற்சாலையின் அருகாமையில் கேஸ் உற்பத்தி தொழிற்சாலை உள்ளதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.