திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற கொழுந்தனாரை, வெட்டிக் கொன்றதாக அண்ணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளவநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர்கள் செல்வம் - பராசக்தி தம்பதி. லாரி ஓட்டுநரான செல்வம் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வதை பயன்படுத்தி, செல்வத்தின் தம்பி ராஜா வீட்டில் இருக்கும் பராசக்தியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றிரவும் குடித்துவிட்டு வந்த தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற செல்வத்தை, பராசக்தி கொடுவாலால் வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது.