நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களும் தங்களது கருத்துகளை அனுப்பலாம் என ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.
நீட் தேர்வு மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது பற்றி ஆராயவும், பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மாற்று நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சட்ட வழிமுறைகள் குறித்து ஆராயவும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.
நீட் தேர்வால் பாதிப்புகள் உள்ளனவா என்பது குறித்து வரும் 23ஆம் தேதிக்குள் பொதுமக்களும் தங்களது கருத்துகளை அஞ்சல் வழியாகவோ, neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம் என இக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
ஒருமாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது ஏ.கே.ராஜன் குழு.