திருப்பூரில் தொழிலதிபர் தனது மகளின் திருமணத்தை எளிய முறையில் நடத்தி, திருமண செலவிற்காக ஒதுக்கிய 37 லட்ச ரூபாயை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் அருள்செல்வம் என்பவரின் 2வது மகன் அருள் பிரனேஷ் என்பவருக்கும், வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் என்பவரின் மகள் அனு என்பவருக்கும் கடந்த 14ம் தேதி கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
திருமண செலவிற்காக ஒதுக்கப்பட்ட 37 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை கொரோனா நற்பணிகளுக்காக வழங்கினர்.