தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வெளிநாட்டில் வசித்து வரும் 2 வீராங்கணைகள் பாலியல் புகாரளித்துள்ளனர்.
தன்னிடம் பயிற்சிக்கு வரும் வீராங்கனைகளுக்கு பிசியோதெரபி வழங்குவதாக கூறி நாகராஜன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
நாகராஜனால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக தற்போது வரை 6 வீராங்கணைகள் எழுத்துப்பூர்வமாக புகாரளித்திருந்த நிலையில், அதில் 2 பேர் வெளிநாட்டில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.
தேசிய மற்றும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தயார்படுத்த வேண்டும் என்றால், தனக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக வீராங்கனைகள் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்