சென்னையின் குடிநீர்த் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள கிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு வந்தடைந்தது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திங்களன்று நொடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் நீரின் அளவு நொடிக்கு 2100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் கண்டலேறு - பூண்டிக் கால்வாய் வழியாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டைக்கு வந்து சேர்ந்தது.
தமிழகப் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் ஆகியோர் கிருஷ்ணா நீரை மலர்தூவி வரவேற்றனர்.