பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபாவை பிடிக்க தனிப்படை போலீசார் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் முகாமிட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து அவர் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய நேற்று டேராடூன் விரைந்த சிபிசிஐடி தனிப்படை போலீசார், குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவர் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.
உத்தரகாண்டிலுள்ள சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்களின் ஆசிரமங்களில் பதுங்கியிருக்கலாம்? அல்லது அங்கிருந்து நேபாள நாட்டிற்கு தப்பிச்சென்றிருக்கலாம்? என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.