கொரோனா 3ஆவது அலையை எதிர் கொள்ள எந்நேரமும் தயாராக இருக்கும்படி தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் மருத்துவக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
3ஆவது அலை வந்தால், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மருத்துவமனைகளும் ஆக்சிஜன் மற்றும் ஐசியூ வசதி கொண்ட 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தவும், குழந்தைகள் பிரிவில் நான்கில் ஒரு பகுதி செவிலியர்களை அவசர கால பணிக்காக முன்கூட்டியே தயார் படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.