பொதுப்போக்குவரத்தை அனுமதித்தல் உள்ளிட்ட மேலும் பல தளர்வுகளை வழங்க, கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என எச்சரித்துள்ளார்.