கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு ரத்த தானம் அளிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவில் ரத்ததானம் செய்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதல் 4 இடத்தில் இருக்கிறது என்றார்.