விருதுநகர் மாவட்டத்தின் பிள்ளையார் நத்தம் கிராமத்தில், ஆண்டாண்டு காலமாக மதுக்கடை, டீக்கடை, கட்சிக்கொடிகள், சினிமா நடிகர்களின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் போன்றவற்றிற்கு கிராம மக்கள் தடை விதித்துள்ளனர்.
800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில், தேர்தல் சமயத்தில் கட்சி கொடிகள், விளம்பரங்கள் ஆகியவற்றிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டை தற்போதுள்ள இளைய தலைமுறையினரும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ஊர் தலைவர் கிருஷ்ணசாமி, திருவிழாவிற்கும் நோட்டீஸ் மற்றும் பேனர்கள் வைப்பதில்லை என தெரிவித்தார்.