தமிழத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் தேநீர்க் கடைகள் இன்று திறக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தேநீர்க் கடைகள் இயங்கலாம் என்றும் பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பார்சல் முறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ - சேவை மையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது