கோவை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 மாவட்டங்களின் ஆட்சியர்கள் உட்பட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 20 பேரைத் தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வேளாண்மை இயக்குநராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகவும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாக ஆணையராகவும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குநராகவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா சமூகநலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.