டாஸ்மாக் திறப்பு விவகாரத்தில் மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? என அமைச்சர் கே. என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அரங்கில் கொரோனா நிவாரண உதவித் தொகை மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதே? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கும்போது எழுப்பப்படாத கேள்வி இங்கு ஏன் எழுப்பப்படுகிறது? என வினவினார்.