தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் கடைகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிகளை அரசு வெளியிட்டுள்ளது.
மதுபானம் வாங்க வருவோர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா என 2 ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளில் ஒரேநேரத்தில் 5 வாடிக்கையாளர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் கட்டாயம் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மதுபானங்களை விற்கக் கூடாது. சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோருக்கு அதிக அளவில் மதுபானங்களை விற்கக் கூடாது என வழிகாட்டலில் குறிப்பிட்டுள்ளது.