தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ ஆகிய இரு நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் ஆக்சிஜன் செறிவூட்டி, ஆக்சிஜன் உருளை, மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு ஆகியவற்றில் முதலீடு செய்யும் உற்பத்தியாளருக்குப் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அரசு அறிவித்தது.
இதையடுத்துத் தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க ஐனாக்ஸ், சி.வி.ஐ. ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 30 விழுக்காடு மூலதன மானியம் வழங்கப்படுவதுடன், சிப்காட் மூலம் நிலம் ஒதுக்கித் தரப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
முத்திரைக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை, 5 ஆண்டுகள் மின்சார வரியில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.