அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகை மளிகைப் பொருட்கள் மற்றும் 2ஆயிரம் ரூபாய் 2-வது தவணை கொரோனா நிதி வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது.
வரும் 14 ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை விநியோகம் செய்யவுள்ளனர். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் 15-ம் தேதி முதல் பொதுமக்கள் தங்களுக்கான நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
முன்னதாக, காலை நேரத்தில் வழக்கமாக விநியோகிக்கும் பொருட்களை ரேஷன் கடையில் விநியோகிக்கவும், பிற்பகலில் டோக்கன்களை விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. சில இடங்களில் இந்த வாரம் விநியோகிக்க வேண்டிய மளிகை பொருட்களை முன்னரே கொடுத்துள்ளதால் காலை முதலே டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது.