தேசிய அளவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளது.
புதிய தேசியக் கல்விக் கொள்கையில் 2030-ம் ஆண்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தமிழகம் கடந்த கல்வியாண்டிலேயே (2019-2020) இந்த இலக்கை தாண்டியுள்ளது.
2010- 11ஆம் கல்வியாண்டியில் 32சதவீதமாக இருந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து தற்போது 51.4சதவீதமாக உள்ளது.
நாட்டிலேயே உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையில் 75.8சதவீதத்துடன் சிக்கிம் மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. 38.8சதவீதத்துடன் கேரள மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதே உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை உயர காரணம் என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.