மின் கட்டணம் செலுத்த மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சேலம் இரும்பாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தபின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டணம் டெபாசிட் செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.