திருப்பத்தூரில் பொதுமக்களுக்கு புத்துணர்ச்சி மற்றும் சுகாதாரத்தை அளிக்கக் கூடிய மூலிகை முக கவசத்தை சித்த மருத்துவர்கள் உருவாக்கி உள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு பயந்து முக கவசம் அணிவோருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை சீர்படுத்தும் விதமா சித்த மருத்துவர்கள் விக்ரம் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கிராம்பு, பச்சைக்கற்பூரம், கற்பூரவல்லி, புதினா உள்ளிட்ட மூலிகை பொருட்களை கொண்டு திரவ ஆவிவடித்தல் முறையில் முக கவசத்தை உருவாக்கி உள்ளனர்.
மேலும் முக கவசங்களை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கினர்.