செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அரை நிர்வாண போக்கிரி.. கத்தியுடன் ரகளை..! வழக்கம் போல மனநோயாளி பட்டம்

Jun 07, 2021 08:55:21 PM

கோவையில் ரவுடி போல ஒருவன் பக்கத்து வீட்டுக்காரர்களை கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆனால் அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் போலீசார்.

கோவை மாநகரம் மசகாளிபாளையம் அம்மா உணவகத்துக்கு எதிரே உள்ள முல்லை நகரில் வசித்துவருபவர் மணிகண்டன். அந்த பகுதியில் ரவுடி போல வலம்வரும் இவன் அவ்வப்போது அந்த பகுதியில் குடிபோதையில் பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்வதும், அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை காலை அவரது வீட்டுக்கு எதிரே உள்ளவர்கள் இவனுடைய அடாவடி நடவடிக்கைகளை தட்டி கேட்ட பொழுது கற்களைக் கொண்டு கேட்டை உடைத்துக் கொண்டு தாக்க முயற்சி செய்துள்ளான் மணிகண்டன்

அங்கிருந்த இளைஞர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுப்பேன் என்று எச்சரித்ததும் கையில் கத்தியை எடுத்து வந்து அவரை குத்த முயன்றுள்ளான் அங்கிருந்த பெண்கள் தடுத்ததால் இளைஞர் தப்பித்தார்

நேரம் செல்ல செல்ல அவனது அட்டகாசம் அதிகரித்ததால் அப்பகுதி மக்கல் செய்வதறியாது திகைத்துப்போய் காம்பவுண்டுக்கு உள்ளேயே பயந்து நின்று கொண்டிருந்தனர் மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் இவனது அடாவடித்தனத்தை பார்த்து பயந்து வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார், மணிகண்டனை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரனையில் மனிகண்டன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கடந்த ஒரு வார காலமாக வீட்டில் தாய் தந்தையரை அடித்து ரகளை செய்து கொண்டு இருந்ததாகவும், அதன் பாதிப்பில் மற்ற தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது அவரை சமாதானப்படுத்தி நீலாம்பூரிலுள்ள மனநல மருத்துவமனையான தென்றல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவன், பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டுபவன் என தொடர் குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை மன நோயாளிகள் என்று போலீசார் அடையாளம் காட்டிவரும் நிலையில் சம்பந்தப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கண்காணித்து கட்டுப்படுத்த தவறியவர்கள் மீதாவது வழக்கு பதிந்து நடவடிவடிக்கை கேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களிடம் சிக்கியவர்களின் ஆதங்கமாக உள்ளது.


Advertisement
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..
தூத்துக்குடியில் 7,893 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement