பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மதிப்பெண்கள் வழங்கப்படும், அதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள், முதலமைச்சருடன் ஆலோசித்து வெளியிடப்படும் என தெரிவித்தார்.