இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கிராம பெண்கள் ஒன்றிணைந்து கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு சமையல் செய்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி பசியை போக்கினர்.
பிள்ளையார்குளம் கிராம பெண்கள் ஒன்றிணைந்து அப்பகுதி மக்களிடம் வசூல் செய்து, ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் தினந்தோறும் உணவு சமைத்து, ஆட்டோவில் இளைஞர்களிடம் கொடுத்து அனுப்புகின்றனர். அதனை காணிக்கூர், பிள்ளையார்குளம், சாயல்குடியிலுள்ள ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியோருக்கு வழங்குகின்றன.