செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான எச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையத்தில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
எச்.எல்.எல் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில், உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுசித்ரா உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு எச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.