கனமழை காரணமாக கன்னியாகுமரி அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதன் தாக்கம் காரணமாக எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரியிலும் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரத்து 273 கன அடி உபரி நீரும், 77 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் இருந்து ஆயிரத்து 981 கன அடி உபரி நீரும் சிற்றார் அணைகளில் இருந்து ஆயிரத்து 979 கன அடி உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, பரளியாறு, குழித்துறை தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.