தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது தொடர்பாக கல்வியாளர்கள் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் தனித்தனியாக கருத்துக்கள் கேட்டு பெறப்பட்டுள்ளது.
அந்த கருத்துக்கள் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்துகிறார். தேர்வை நடத்துவதற்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இன்று நடக்கும் ஆலோசனையில் இறுதி முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.