செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதலியை பார்க்க பாகிஸ்தான் பார்டர் தாண்டிய பிரசாந்த்..! கம்பிகளுக்கு பின்னால் காதல்

Jun 04, 2021 08:50:27 AM

முகநூல் காதலியைப் பார்ப்பதற்காக, பாகிஸ்தான் எல்லையைத் தாண்டிய காதலன் காவல்துறையிடம் சிக்கியதால், 4 ஆண்டுகள் ஜாமீன் எடுக்க ஆள் இல்லாமல் கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். காதல் இளவரசன் மீட்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு....

மறைந்திருந்து பார்த்து மலர்ந்த காதல்..! பார்க்காமலேயே கடிதத்தால் சேர்ந்த காதல்..! காதலுக்கு மரியாதை என்றால் கண்டதும் காதல்..! என பல விதமான காதல் சினிமாக்களை பார்த்து ரசித்த நம்மவர்களுக்கு நம்ம சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்தின் நாடு கடந்த காதல் நிறைய வலியும், கொஞ்சம் காஸ்ட்லியுமானது..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பிரசாந்த், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். அப்போது முக நூலில் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். முகநூலில் உண்மை முகம் காட்டாத காதலியை நெஞ்சம் உருகிக் காதலித்துள்ளார். ஒரு நாள் காதலியின் புகைப்படத்தை பார்த்து அகமகிழ்ந்து போனதால், அவரை நேரில் பார்ப்பதற்காக 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார் நம்ம காதல் இளவரசன் பிரசாந்த்..!

அவரோட துரதிர்ஷ்டம் காதலியைக் கண்டு அவளது இதயச்சிறையில் அடைபடும் முன்பே, அவரை கைது செய்த பாகிஸ்தான் காவல்துறை இஸ்லாமாபாத் சிறையில் அடைத்தது. பிரசாந்த் பணி நிமித்தமாக பாகிஸ்தான் செல்வதாக வீட்டில் பொய் சொல்லியிருந்த நிலையில், தனது மகன் 2 ஆண்டுகள் ஆகியும் வீடு திரும்பாததால், அவரது தந்தை பாபு ராவ் சைபராபாத் மாதபூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பிரசாந்த் காணாமல் போனது குறித்து 2019 ஏப்ரல் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் காதலியை தேடிச்சென்று தாடியுடன் காத்திருந்த பிரசாந்த், பாகிஸ்தானில் இருந்து வெளியேற இயலாமல் தவிப்பதாக செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 4 வருடங்கள் கடந்த நிலையில் இந்த வீடியோ பாபுராவின் கண்களில் பட , இதனை ஆதாரமாகக் கொண்டு தன் மகன் பிரசாந்த் பாகிஸ்தானில் தவித்துக் கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி அவரை உடனடியாக மீட்டுத் தரும்படி தந்தை பாபுராவ், சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாரிடம் வேண்டுகோள் வைத்தார்.

இதனை வைத்து, மாநில அரசுக்கும் வெளியுறவு அமைச்சகத்திற்கும் காவல் ஆணையர் சஜ்ஜனார் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் பேசி, நாடு திரும்ப இயலாமல் தவித்த பிரசாந்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, பிரசாந்தை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டது. அதன்படி வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பிரசாந்தை பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். காதலியைத் தேடி சென்ற தன் மகன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாரின் தொடர்ச்சியான முயற்சியால் புதன் மாலை ஐதராபாத் அழைத்து வரப்பட்டு, வியாழக்கிழமை தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார்.

மகனின் வருகையால், மகிழ்ச்சியில் உள்ள குடும்பத்தினர், அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மேலும் விடுதலைக்கு முயற்சி செய்த அனைத்துத் தரப்பினருக்கும் குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்த அந்த 4 வருடத்திலும், எப்படியாவது தனது காதலியை சந்தித்து விடமாட்டோமா ? என்ற தவிப்பிலேயே நாட்களை நகர்த்தி வந்த பிரசாந்த், தனது காதல் உண்மை என்றும் எப்படியும் தனது காதலி தனக்கு கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தவர் இப்போது தான் ஒரு தெளிவான மன நிலைக்கு வந்துள்ளார்.

அதே நேரத்தில் பிரசாந்திடம் பெண் பெயரில் பழகியது ஃபேக் ஐடியாக இருந்தால் பிரசாந்தின் நாடுகடந்த காதல், நித்தியின் இல்லாத கைலாசா தீவுக்கு வழி தேடுவது போன்றதாகிவிடும்..!


Advertisement
நாகப்பட்டினத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இ-சேவை மையத்தில் பழுதடைந்த கணிணி.. பணிகளை செய்ய முடியாமல் மக்கள் அவதி..!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது கூடுகிறது? - தேதியை அறிவித்த சபாநாயகர்
திருப்பூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள படகு குழாம்..!
மதுரை அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் தள்ளுமுள்ளு.. முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே வாக்குவாதம், கைகலப்பு..!
ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்றது.. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உரசி நின்றதால் அதிர்ச்சி..!
திருவாரூரில் குறுவை சாகுபடி நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட குறைவு..!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்..
விஜய் பேசியது தவறு - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்..
பித்தளை குவளைக்குள் சிக்கிச் கொண்ட 5 வயது சிறுமி - மீட்ட தீயணைப்புத்துறையினர்

Advertisement
Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி


Advertisement