வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு திருவண்ணாமலையில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நாளையும்,4ம் தேதியும் வட தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். இதனிடையே, சென்னை உட்பட 13 மாவட்டங்களில் பகல் நேர இயல்பு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் 3 நாட்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.