தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள திருக்கோவில் பணியாளர்கள் 14ஆயிரம் பேருக்கு தலா 4ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளார்.
இது குறித்த செய்திக்குறிப்பில், ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டு கிடக்கும் சூழலில், அங்கு பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தலா 4ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசியுடன் 15 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.