தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கு 42 லட்சத்து 58 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவப் பணிகள் இயக்ககத்தில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் காணொலியில் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் இருநாட்களுக்குத் தேவையான அளவு மருந்தே இருப்புள்ளதாலும், ஜூன் மாதத்துக்கான தடுப்பு மருந்து ஒதுக்கீட்டில் இருந்து ஆறாம் தேதிக்குப் பின் தான் வரத் தொடங்கும் என்பதாலும், ஜூன் முதல் வாரத்தில் தடுப்பூசி இயக்கம் தடைபடும் சூழல் உருவாகும் எனத் தெரிவித்தார்.