திருநெல்வேலியில் கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 40 வயது பெண் உயிரிழந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த மே ஒன்றாம் தேதி கொரனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கண்ணில் அறுவை சிகிச்சை செய்த நிலையில், அதில் கரும்பூஞ்சை நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை அடுத்து அவரை கடந்த 19ஆம் தேதி அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் அங்கு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 3 பேர் கரும் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.