கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு , திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் வரும் 7 ஆம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடபட்டுள்ள அரசாணையில், தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் , அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், கோவை, திருப்பூர் , சேலம், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஏற்றுமதி நிறுவனங்கள், செயல்பட தடைவிதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழில்நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.