ஜி.எஸ்.டி. வரி நடைமுறை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏற்றதாக இல்லை எனவும் அவை தீர்க்கப்பட வேண்டும் எனவும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 43-ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய அவர், அவசர கதியில் செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி நடைமுறையில் அடிப்படை குறைபாடு உள்ளது என குற்றம்சாட்டினார்.
மாநிலங்களுக்கு கிடைக்கவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிலுவைத் தொகையை போராடி பெற வேண்டிய நிலை உள்ளது என சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.