செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தெனாலிராமன் பாணியில் கோர்ட்டில் ஜாமீன் பெற்ற சாப்பாட்டு ராமன்..! கொரோனா இவருக்கு உதவியிருக்கு..!

May 28, 2021 09:39:11 PM

சித்தமருத்துவம் படித்துவிட்டு ஆங்கிலமருத்துவம் பார்த்து வந்த யூடியூப் பிரபலம் சாப்பாட்டு ராமன் கள்ளக்குறிச்சி அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டார். சாப்பாடு இனி ஜெயிலில் தானோ என்று கலங்கியவருக்கு பெயில் கிடைத்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

மங்களகரமாக மஞ்சளில் ஆரம்பிக்க பல குக்கிங் சேனல்கள் இருந்தாலும், ஒரு குக்கர் பிரியாணியை இலையில் கொட்டி, அதில் தயிரை ஊற்றி ஒற்றை ஆளாக சில நிமிடங்களிலேயே வாயில் உருட்டிப்போட்டதால் யூடியூப்பில் பிரபலமானவர் சாப்பாட்டு ராமன் என்று அழைக்கப்படும் சித்தமருத்துவர் பொற்செழியன்..!

60 வயதான சாப்பாட்டுராமன் பொற்செழியன், சித்தமருத்துவத்தில் பி.இ.எம்.எஸ் படித்துவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தில் 28 ஆண்டுகளாக சித்தா கிளினிக்கும் நடத்திவந்தார்.

80ஸ் ரஜினியின் ஹேர் ஸ்டைலில்.... ஹேர் டை உபயத்தால் கருகரு முடியுடன்.... தனது யூடியூப் சேனலில் தோண்றி அசைவ உணவுகளை அசராமல் சாப்பிட்டே பிரபலமானார் நம்ம சாப்பாட்டுராமன்..!

எப்படி இவரால் மட்டனையும் சிக்கனையும் இவ்வளவு வேகமாக சாப்பிடமுடிகிறது ? என்று வியந்தவர்கள் ஏராளம்..! இதனை வைத்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும் சித்த மருந்துகளையும் ஆன்லைன் வாயிலாக விற்று வந்தார்.

இந்த நிலையில் சித்தமருத்துவரான பொற்செழியன், ஆங்கில மருத்துவம் பார்த்துவருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து சாப்பாட்டுராமனின் கிளினிக்கிற்கு காவல்துறையினருடன் சென்ற மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

அங்கு பொற்செழியன், தன்னிடம் சிகிச்சைக்கு வருவோரிடம், ஆங்கில மருந்துகள் வழங்குவது உறுதி செய்யப்பட்டது. அவரது கிளினிக்கில் இருந்து ஏராளமான ஆங்கில மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சாப்பாட்டுராமனான பொற்செழியனை கீழ்குப்பம் காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாப்பாட்டு ராமன் பொற்செழியனை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.

3 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் கூட, கொரோனா பாதிப்பால் மக்கள் அவதிப்படும் சூழலில், வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு வீடியோ பதிவிடுவதற்கு தனது மனசுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அதனால் கடந்த ஒரு மாதமாக வீடியோ எதும் பதிவிடவில்லை என்றும் சாப்பாட்டு ராமன் கூறி இருந்தார்.

ஊரடங்கால் கொரோனா குறைந்துவருவதால், அடுத்தவாரம் புதிய சாப்பாட்டு வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிடும் திட்டத்துடன் வீட்டில் இருந்த சாப்பாட்டுராமனுக்கு, சாப்பாடு இனி ஜெயிலிலே..! என போலீசார் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட சாப்பாட்டுராமனோ, தான் சித்தமருத்துவர் என்பதால் பலதரப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் கொரோனா தொற்றால் என் மூலமாக யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு குவாரண்டைனில் இருப்பதாகவும், என்னை சிறையில் அடைப்பதால் என் மூலமாக அங்குள்ளவர்களுக்கு தொற்று பாதித்து விடக்கூடாது என்பதால் தன்னை ஜாமீனில் விட கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்டு சாப்பாட்டுராமனை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி ஜாமீனில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் நீதிபதி. தெனாலிராமன் பாணியில் சாமர்த்தியமாக பேசி பெயில் கிடைத்ததால் சத்தம் இல்லாமல் தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார் நம்ம சித்தமருத்துவர் சாப்பாட்டுராமன்..!


Advertisement
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..
தூத்துக்குடியில் 7,893 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்
ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வர மறுத்த மருத்துவர்கள்!.. பொதுமக்கள் வாக்குவாதத்திற்கு பிறகு தாமதமாக சிகிச்சை

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement